|
|
|
மொழிக்கட்டுகள் - ஓர் அறிமுகம்Joomla! இற்கான தமிழ்க் குழுமயமாக்கம் இலங்கையில் இந்த ஆண்டுத்த தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் ta-lk மொழிக்கட்டு Joomla! இன் 1.5.2 பதிப்புடன் முதலாவதாக வெளிவந்தது. நீங்கள் அறிந்திருக்கலாம், Joomla! ஆனது மூன்று வகையான மொழிக்கட்டுகளைக் கொண்டுள்ளன.
இவற்றில் நிறுவலுக்கான மொழிக்கட்டு Joomla! 1.5.2 உடன் வெளிவந்தது. பின்னர், தளத்திற்கான மற்றும் நிர்வாகிக்கான மொழிக்கட்டுகள் படிப்படியாக உருவாக்கப்பட்டது. மேலும் இம்மொழிக்கட்டுகள் மேம்படுத்தப்பட்டுவருகின்றன. இதற்கு உங்களுடைய கருத்துக்கள் பேருதவியாக இருக்கும். மொழிகட்டு உருவாக்கம்இம்மொழிக்கட்டு இலங்கையின் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஒரு முன்னெடுப்பான இலங்கைத் தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) மற்றும் இலங்கை ஆள்களப்பதிவகம் (LK Domain) ஆகியவற்றின் ஆதரவில் இலங்கை மொரட்டுரைப் பல்கலைக் கழகத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் இயந்திரவியற் துறையில் (CSE) முன்னெடுக்கப்பட்ட லக்கப்ஸ் (LAKapps) பணித்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது. இந்த மொழிக்கட்டு உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர்கள் தட்சணாமூர்த்தி ஞானகுமார் மற்றும் கெங்காதரஐயர் சர்வேஸ்வரன். அத்தோடு அவருடன் ஏனைய மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஏனைய தமிழ் அன்பர்களும் இதற்கு உதவினர். முக்கியமாக கலைச்சொற்களஞ்சியத்தை உருவாக்குவதில் பெரிதும் தங்கள் பங்களிப்பைச் செய்தனர்.
|



