Print

Joomla! 1.5.8 வெளிவந்துள்ளது

Joomla! 1.5.8பதிப்பு நவம்பர் மாதம் 10 ம் திகதி வெளிவந்துள்ளது. இது பல்வேறு வகையான பாதுகாப்புச் சிக்கல்களைத் தீர்க்கும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளியாகிய Joomla! 1.5.7 பதிப்பில் கூட XSS என்ற பாரிய பாதுகாப்புச் சிக்கல் இருப்பது அடையாளங்காணப்பட்டுள்ளது. அவ்வாறான பிரச்சினைகளையெல்லாம் நிவர்த்திசெய்யும் விதத்தில், இந்த 1.5.8 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அத்தோடு இப்பதிப்பு Wohnaiki என்ற புதிய பெயருடன் வெளியிடப்பட்டுள்ளதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலதிக விபரங்களுக்கும் பதிவிறக்கிக்கொள்ளவும் - இங்கே சொடுக்குக

 


Joomla! திறந்த மூல உலகில் இரண்டு வகைகளில்  இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது

ஒவ்வொரு வருடமும் Packt Publishing நிறுவனம் திறந்த மூல மென்பொருள்துறையை ஊக்குவிப்பதற்காக 

விருது 1 : சிறந்த திறந்த மூல உள்ளடக்க நிர்வாகத் தொகுதி

விருது 2 : சிறந்த PHP திறந்த மூல மென்பொருள் தொகுதி

ஆகிய இரண்டு விருதுகளை வழங்கி வருகிறது.

இம்முறை Joomla! நிறுவனம் இரண்டு வகையிலுமே இரண்டாம் இடத்தைப் ஐ பெற்றுக்கொண்டுள்ளது. Drupal மென்பொருள் தொகுதி இரண்டிலும் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இம்முறை புதிதாகவும் ஒரு விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது திறந்த மூல உள்ளடக்கத் தொகுதிகளில் பணிபுரியும் மிகச்சிறந்தவர்களுக்கு "Open Source CMS Most Valued People" (CMS MVP) என்ற விருதை வழங்கத்தொடங்கியிருக்கிறது. இதனடிப்படையில் 25 சிறந்த பணியாளர்களை Packt Publishing நிறுவனம் தெரிவுசெய்துள்ளது. அவற்றுள் Joomla! ஐச் சேர்ந்த Johan Janssens உம் ஒருவர்.

இந்த இடத்தில் Joomla! நிறுவனத்திற்கும் Johan Janssens எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தமிழ் Joomla! குழுமம் சார்பாகத் தெரிவித்துக்கொள்வோம். வருமாண்டில் Joomla! எல்லாத் துறைகளிலும் விருதுகளைப் பெறவேண்டும் என்ற வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம். மேலும்

 


Joomla™! இற்கு  வாக்களித்து அதனை திறந்த மூல மென்பொருள் உலகின் வெற்றியாளராக்குவோம்

[PACKT] வெளியீட்டு நிறுவனம் திறந்த மூல மென்பொருள் உள்ளடக்க நிர்வாக தொகுதிகளுக்கு(Content Management System)  ஆதரவளிப்பதற்காகவும், அவற்றை ஊக்குவிப்பதற்காகவும் 3வது முறையாகவும் ஒரு விருதை அறிவித்துள்ளது. இதில் இம்முறை Joomla™! உட்பட சில மென்பொருள்தொகுதிகள் இறுதிப் போட்டிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

Joomla! இற்கு பின்வரும் வகைகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஏனவே நாம் பின்வரும் இரண்டு வகைகளிலுமே Joomla! க்கு வாக்களித்து அதனை இவ்வாண்டின் தலைசிறந்த திறந்த மூல மென்பொருள் உலகின் வெற்றியாளராக்குவோம்.

விருது 1 : சிறந்த திறந்த மூல உள்ளடக்க நிர்வாகத் தொகுதி

விருது 2 : சிறந்த PHP திறந்த மூல மென்பொருள் தொகுதி

வாக்களிக்க

மேலதிக விபரங்களுக்கு


 Joomla™! 1.5.7 வெளியிடப்பட்டுள்ளது

செவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2008

Joomla 1.5.6 Security Release

 

 Joomla! குழுமம்  Joomla! 1.5.7 பாதுகாப்புப் பதிப்பினைத் வெளியிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது. இது ஏற்கனவே இருக்கும் பதிப்புகளிலுள்ள பல வழக்களைச் சரிசெய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதால் அனைத்துப் பயனாளர்களும் தங்களுடைய தளங்களை உடனடியாக இப்பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இப்பதிப்பினைப் பதிவிறக்கிக்கொள்ள இங்கே சொடுக்குக

 


Joomla! இல் தமிழிற்கான கருத்துக்களம் (Tamil Forum)

Joomla! தளத்தில் தமிழிற்கான ஒரு கருத்துக்களம் நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் தமிழ் - Joomla! சம்பந்தமான கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களைப் பற்றி அங்கே கலந்துரையாடலாம். கருத்துக்களத்திற்குச் செல்ல இங்கே சொடுக்க 

இது ஒரு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நாம் இனி அங்கே தமிழிலேயே உரையாடலாம். அத்தோடு இத்தளத்திலுள்ள கருத்துக்களத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம்.


 Joomla™! 1.5.6 வெளியிடப்பட்டுள்ளது

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2008

Joomla 1.5.6 Security Release

 Joomla! குழுமம்  Joomla! 1.5.6 திடீர் பதிப்பினைத் வெளியிட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது. இது ஒரு பாரிய பாதுகாப்புச் சிக்கலை சரிசெய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதால் அனைத்துப் பயனாளர்களும் தங்களுடைய தளங்களை உடனடியாக இப்பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இப்பதிப்பினைப் பதிவிறக்கிக்கொள்ள இங்கே சொடுக்குக

இப்பாதுகாப்புச் சிக்கல் சம்பந்தமான மேலதிக விபரங்களைக் காண இங்கே சொடுக்குக

 


Joomla™! 1.5.5

Joomla! குழுமம் மிக அண்மையில் Joomla! 1.5.5 பதிப்பை வெளியிட்டுள்ளது. July 8, 2008 அன்று Joomla! 1.5.4 வெளியிட்டபின்னர், அதில் ஏற்பட்ட வழுக்களுக்கான திருத்தங்கள் மற்றும் மேலும் பல புதிய மேம்படுத்தல்களுடன் மூன்று வாரங்களுக்குள்ளாக இந்த Joomla! 1.5.5 ஆனது 28 July 2008 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஏற்கனவே உள்ள ஒரு பதிப்பை Joomla! 1.5.5 இற்கு மேம்படுத்திக்கொள்வதற்கான இற்றைப்படுத்தல்களையும் Joomla! குழுமம் வழங்குகிறது. இதனை இங்கே பதிவிறக்கிக்கொள்ளலாம்.